×

நள்ளிரவு பூத்த நிஷாகந்தி

 

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ஒருவர் வீட்டில் நள்ளிரவு மட்டும் பூக்கும் அபூர்வ நிஷா கந்தி மலர்கள் நேற்று பூத்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் கண்டு வியந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (46). இவரது வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக நிஷா கந்தி மலர் செடியை வளர்த்து வருகிறார். இந்த நிஷா கந்தி மலர்கள் இரவில் பூத்து காலையில் வாடி விடும் தன்மை கொண்டது. ‘‘இரவு ராணி’’ என அறிவியலாளர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மலர்கள் கள்ளிச்செடி வகையை சேர்ந்தது.

விஷ்ணு படுக்கையில் இருப்பது போல் தோற்றம் இருப்பதால் இது ‘‘அனந்த சயன பூ’’ எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே இந்த பூ பூக்கும் தன்மை கொண்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தன்ராஜ் வீட்டில் நிஷாகந்தி திடீரென பூத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவு நேரம் என்பதையும் பொருட்படுத்தாமல் திரண்டு வந்து நிஷா கந்தி மலரை கண்டு வியப்படைந்தனர்.

The post நள்ளிரவு பூத்த நிஷாகந்தி appeared first on Dinakaran.

Tags : Nishakanti ,Mettupalayam ,Gandhi ,
× RELATED குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம்